நிக் அசிஸ் காலமானார்

 

PAS- Nik aziz-MBபாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசாருமான நிக் அசிஸ் நிக் மாட் முதுமையின் காரணமாக நேற்று காலமானார்.

அவர் கிளந்தான் மாநில மந்திரி புசாராக 23 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள மசூதியில் அவரது ஈமச் சடங்கு காலை மணி 10.00 க்கு நடத்தப்படும்.

பிரதமர் நஜிப் ரசாக், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் பினாங்கிலிருந்து இன்று காலையில் அங்கு சென்றடைந்தனர்.

கிளந்தான் மாநிலம் ஒரு மாபெரும் தலைவரை இழந்து விட்டது என்று அம்மாநில மந்திரி புசார் அஹமட் யாக்கோப் அங்கு குழுமியிருந்தவர்களின் கூட்டத்தில் பேசிய போது கூறினார்.