மக்கள் மன்றத்தில் நீதி கோரும் உண்ணாவிரதம்!

கோவலன்: கோமாளி, உண்ணா விரதமிருந்து எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நிலத்தை பெற வேண்டிய அவசியம் என்ன?

கோமாளி: உண்ணாவிரதம் என்பது சுயமாக உணவை புறக்கணித்து பட்டினியுடன் அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகும். மக்களின் பண்பாட்டில் உணவு மையமாகிறது. அதைப் புறக்கணித்து அதனால் உருவாகும் பசியை கொண்டு இந்த ஏதார்த்த நிலையில் உண்மையான பசி உணவில் அல்ல அது நீதியில், நியாயத்தில் உள்ளது என்பதை வெளிக்கொணரும் வலுவான அகிம்சை அரசியல் ஆயுதம் உண்ணாவிரதம்.

சாதாரண மனிதர்களை கூட மகான்களாக மக்களிடையே மதிப்பேற்றக்கூடிய உண்ணாவிரதம், நீதிமன்றத்தில் கிடைக்காத நீதியை மக்களின் மத்தியிலே தேடும்.

எப்பிங்ஹாம் பள்ளி விடயத்தில், அதை நீதிமன்றம் சென்று தீர்க்க இயலாது. மெழுகுவர்த்தியில் தொடங்கி பத்திரிக்கை விவாதம் வரை சென்றும் நிலைமை மாறாத சூழலில், உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள் தங்களின் பட்டினி பசியுடன் சுயதுன்புறுத்தலுக்கு ஆளாகி உண்ண மறுப்பது சமூக நீதியை சவாலாக்குகின்றன.

உடலை வதைக்கும் அவர்களின் பசி, பட்டினி, வலி, சமூகம் படும் அவதைகளுக்கும் அநீதிகளுக்கும் ஒப்பிடுகளாக காட்டப்படுகின்றன. எனவே, இங்கு வெற்றி என்பது மக்கள் மத்தியிலே உண்டாக்கப்படும் அரசியல் தாக்கமாகும். அது நீதி நியாயத்தை மட்டுமே முன்வைக்கும்.

 

எபிங்காம் நில உண்ணாவிரதப் போராட்டம்: (காணொளி 01) (காணொளி 02)