கருங்காலிகளை கலையெடுப்பதுதான் இனமான உணர்வு உள்ளவனின் கடமை!

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் என்பது போல் ஊர் ஓடும் போது ஒத்தோடு என்பது போல  ஊருடன் இணைந்து ஊலையிடுவதாலும் கூச்சலிடுவதாலும் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல் குற்றத்தை மட்டுமே பார்க்கும் குணக்கேடர்களுக்கும் காமாலைக் கண்ணர்ககு எதுவும் தெரியாது.

இன்று ம.இ.கா.வை குற்றம் சுமத்தும் அதிமேதாவிகள் ம.இ.காவின் கடந்த கால தவறுக்கு இவர்களின் தந்தைகளும், தாத்தன்களும், அவர்களின் முன்னவர்களும் காரணம்  என்பதை அறியாமல் உலறுகின்றனர் என்பது மட்டும் உறுதி.

இன மீட்பிற்காக உருவாக்கப்படும் ஓர் இயக்கத்தில் காலப் போக்கில் கருங்காலிகள் நுழைவர் என்பது தவிர்க்க இயலாது. அவர்ளை கலையெடுப்பதுதான் இனமான உணர்வு உள்ளவனின் கடமையே தவிர ஊருடன் கூடி நின்றி மூன்றாம் தர நான்காம் தர மனிதர்கள் போல் காறி உமிழ்வதல்ல பெரிய வேலை. அதனை தெருவில் போகும் யாரும் செய்ய முடியும்.

சமய தீவிரவாத அமைப்பான பாஸ் கட்சியை விட ம.இ.கா. நமக்கு அந்நியமான கட்சியாய் கருதுவதில் எனக்கு உடன் பாடில்லை. ஆயிரம் உண்டு இங்கு சாதி இதில் அந்நியர் வந்து புகழ் என்ன நீதி என்று மகாகவி பாரதி சொன்னான். அந்நியர் உன்னை புகழ வேண்டும் அது உனக்கு இனிக்க வேண்டும் என்று மட்டும் கனவு காண வேண்டாம்.

கடந்த 66 ஆண்டுளில் ம.இ.கா.வின் சாதனைகள் எண்ணற்றவை. இலவச குடியுரிமைகள் கொடுக்கப்பட்ட காலத்திலும், தோட்டப் துண்டாடல் காலங்களிலும் ம.இ.கா.வின் பங்களிப்பு அதிகம். அன்றைய ம.இ.கா.தலைவர் துன் சம்பந்தன் பத்து பத்தாக சேர்த்த சொததுத்தான் இன்று இந்தியனின் மானத்தைக் காக்கும் சொத்தாக தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கமாக விரிந்து வளர்ந்து நின்று ம்க்களுக்கு நன்மை செய்து கொண்டிருகிறது. 17 தோட்டங்களைப் பெற்றிருக்கிறது.

தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் விஸ்மா துன் சம்பந்தன் தமிழனின் தலையை நிமிரச் செய்கிறது. அன்று அவரையும் எதிர்க்கும் ஒரு கூட்டம் இருந்தது. அக்கூட்டத்தாரின் சாதனையாக இந்தியர்களின் அடையாளமாக இன்று எஞ்சி நிற்பது என்ன என்பதை இன்று  ம.இ.கா.வை வசைப்பாடுவோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடுத்து குறுகிய காலத்தில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் வந்தார். மெனாரா மாணிக்கவாசகம் கண்டார். நேசா கண்டார். அதன் பின்னர் 29 ஆண்டுகள் டத்தோஸ்ரீ சாமிவேலு தமது நிர்வாகத் திறனால் அடித்தடிளும், நாற்காலிகளும் பறந்த ம.இ.காவில் அமைதியைக் கொண்டு வந்தார். கட்டுக் கோப்புக்குள் இருந்த கட்சியில் அவர் இன்னும் அதிகம் செய்திருக்க முடியும். ஆனால் அவர் காற்றுப் பரிந்தால் மணக்குது என்றும் எச்சல் துப்பினால் பன்னீர் தெளிக்கிறது என்றும் ஏசினால் அபிஷேகம் நடக்கிறது என்றும் தங்களின் சுய நலத்திற்காக கூணிக் குறுகி கூழைக் கும்பீடு போட்டவர்கள் யார் என்பதை எண்ணிப் பாருங்கள். அவர்களில் நீங்களும் உங்கள் முன்னோர்ளும் இருக்கலாம் அப்படியிருக்க ம..இ.கா… ம.இ.கா.என்று எடுத்தற்கெல்லாம் ம.இ.கா.வை மட்டும் குற்றம் சுமத்த யாருக்கும் வெட்கமில்லை என்றே கருதுவேன்.

வென்டோ எகடமி தொடங்கி, டேப் கல்லூரி, ஏய்மஸ்ட் பல்கலைக்கழகம் வரை, எம்ஐடி என்று சாமிவேலு காலத்தில் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு அவரின் பங்களிப்புகள் பெரிதே. அதிலே குறைகள் இருக்கலாம். இன்று குறை கூறுவோரில் பலரும் அவர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் சாமிவேலுவின் தலைமையிலான அன்றைய ம.இ.காவின் வழி உதவி பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

கோயில்கள் பற்றி சொல்லவே வேண்டாம். சாமிவேலுவின் தலைமைத்துவம் பற்றி உடன்மறையாகவும் எதிர்மறையாகவும் எண்ணற்றக் கருத்துக்களை விவாதிக்கலாம். ஆனால் அவர் இந்திய சமுதாயத்திறகு எதுவும் செய்யவில்லை என்பது அபத்தமாகும். இல்லை அவர் எதுவும் செய்யவில்லை என்று சொல்வோமனால் எதுவும் செய்யாத ஒருவரை தங்ளின் தன்னலத்திற்காக 29 ஆண்டுகள் பதவியில் வைத்திருந்தது நம்மவர்களின் தவறல்வா? அந்த  நம்மவர்களில் நம் தந்தையும் தாத்தனும் உறவினரும் இருப்பார்கள் அல்லவா. அப்படி என்றால் நம்மவர்களால் வளர்க்கப்பட்ட ம.இ.காவை குற்றம் சுமத்துவது நம் முகத்தில் நாமே காறி உமிழ்ந்து கொள்வதற்கு சமமல்லவா?

ம.இ.கா.வை எங்களுக்குப் பிடிக்காது என்றால் ம.இகா.விற்கு வெளியில் நீங்கள் இந்திய சமுதாயத்திற்கு செய்த சாதனைகள் என்ன? உங்களின் சாதனைகளாக மலேசிய இந்தியர் வரலாற்றிச் சுவடுகளில் பதிவாகியுள்ளவை எவை என்பதைப் பட்டியலிட முடியுமா?

இன்று இந்திய சமுதாயத்தின் காவலர்கள் போல் பேசும் வேற்று இனத்தைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர்கள்  2008ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்திர்களுக்காக செய்தது என்ன?

தவறு செயவ்து மட்டும் குற்றமல்ல குற்றத்திற்கு துணை போவதும் பார்வையாளர்ளாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் குற்றமே! தனி மரங்கள் தோப்பாவதில்லை. தூண்டில் இரைகள் உணவாவதில்லை. இனம் போல் இனமல்லாதார் கேண்மை நன்மை பயப்பதிலலை. சிந்தித்து செயல்படுவோம்.

இதையெல்லாம் சொல்வதால் நான் ம.இ.கா.காரன் என்று கருதிவிட வேண்டாம் நான் எந்த கட்சியிலும் உறுப்பினன் அல்ல…

மானமுள்ள தமிழன் குமரன், பேரா