ஸ்கோர்பியன்-ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாகக் கூறி பிரெஞ்ச் நீதிமன்றத்தில் தான் வழக்குப் பதிவு செய்திருப்பதுதான் அரசு தன்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள காரணம் என்று மனித உரிமைக்காக போராடும் அமைப்பான சுவாராம் குறிப்பிட்டுள்ளது.
“வழக்கு ஜோடிப்பதற்காக பிஎன் அரசு அரசுத்துறைகளையும் அரசு ஊழியர்களையும் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் வெட்கக்கேட்டைப் பார்க்கிறோம்”, என்று சுவாராம் நிர்வாக இயக்குனர் இ. நளினி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்நடவடிக்கைகளிலிருந்து அரசு, சுவாராமுக்குள்ள நற்பெயரைக் கெடுக்கவும் ஸ்கோர்பியன் ஊழல் தொடர்பில் மேலும் ஆதாரங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்கவும் முனைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது”, என்றும் அவர் சொன்னார்.

























