புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் போராட்டம்: பிரதமர் பதில் அளித்துள்ளார்

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன்பு புக்கிட் ஜாலில் தோட்ட முன்னாள் தொழிலாளர்களின் வீட்டு பிரச்னை குறித்து பிரதமர் நஜிப்புடன் அத்தொழிலாளர்கள் நடத்திய சந்திப்பிற்குப் பின்னர், இப்போது அவர்களுக்கு பதில் கிடைத்துள்ளது என்று ஜாரிட் இயக்கத்தின் எஸ். மாதவி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அளித்துள்ள பதில் என்ன என்று அவர் அவ்வறிக்கையில் கூறவில்லை. அது குறித்த தகவலை வெளியிடுவதற்கு நாளை (அக்டோபர் 5) ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

மேல்விபரங்களுக்கு 012-6045 807 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.