கோவில்களை கழிப்பறைகளுடன் ஒப்பிடுவதா? அமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி : கோவில்களை, கழிப்பறைகளுடன் ஒப்பிட்டுப் பேசிய இந்திய மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ் வீடு முன், நேற்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்துடன் “அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றும் கோஷமிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சருமான, ஜெய்ராம் ரமேஷ், அண்மையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், “கோவில்களை விட, கழிப்பறைகளே மிகவும் முக்கியம். மேலும், கோவில்களும் சுகாதாரமான வகையில் இல்லை” என கூறினார்.

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது. அதேநேரத்தில், கோவில்களை கழிப்பறைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதா எனக் கூறி பா.ஜ., உட்பட பல இந்து அமைப்புகள் அமைச்சரின் பேச்சுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

TAGS: