ரஷ்ய பெண்கள் மனதில் குடியிருக்கும் விளாடிமிர் புதின்!

மாஸ்கோ: ரஷ்யாவின் அதிபராக இருக்கும் புதினின் மீது அந்நாட்டு பெண்களுக்கு அப்படி ஒரு மோகமாம்!

லெவாடா என்ற நிறுவனம் அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ரஷ்யா நாடு முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் ஐந்து பெண்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் புதினை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளனர். புதினின் ஆளுமையும் நிர்வாக திறனுமே தங்களை கவர்ந்திழுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

ரஷ்ய பெண்கள் இப்படி சொல்வது புதிதும் அல்ல! 2004-ம் ஆண்டு புதினைப் பற்றிய பாப் ஆல்பம் வெளியிட்ட பெண் ஒருவர், புதினைப் போன்ற கணவர் வேண்டும் என்று கூறியிருந்தார்.

புதினுக்கு எதிராக ரஷ்யாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் ரஷ்ய பெண்கள் இவ்வாறு கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா நாட்டிற்கு 3-ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் விளாடிமிர் புதின், நேற்று தனது 60-ஆவது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார்.