சுவாராம் விசாரணை: இறந்துவிட்ட நிறுவனருக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்பியது ROS

சங்கப் பதிவகம், மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராமின் உயர் அதிகாரிகளுக்கு வாக்குமூலம் பதிவுசெய்ய வெள்ளிக்கிழமை வர வேண்டும் என்று அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளது. அது அறிவிக்கை அனுப்பிய ஒருவர் ஈராண்டுக்கு முன்பே காலமாகி விட்டார்.

அக்டோபர் 8 தேதியிடப்பட்ட அந்த அறிவிக்கை சுவாரா இனிஷியேடிப் சென். பெர்ஹாட் வழக்குரைஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் சுவாராம் நிறுவனர் பான் இயு தெங், ,இணை நிறுவனர் முகம்மட் நசிர் ஹஷிம், செயல்முறை இயக்குனர் நளினி ஏழுமலை ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பான் 2010-இல் காலமானார்

“அதில் ஒரு பெயரைப் பார்க்க சங்கடமாக இருந்தது. பான் இயு தெங் 2010-இலேயே காலமாகி விட்டார். அதை அறியாமல் ஆர்ஓஎஸ் அறிவிக்கை அனுப்பி வைத்துள்ளது”, என்று நளினி ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

மூவரும் அக்டோபர் 12-இல், ஆர்ஓஎஸ் விசாரணை அதிகாரி அப்துல் ரஹிம் முகம்மட் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

TAGS: