ஒபாமாவின் தேர்தல் பணிமனை மீது மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு

டென்வர்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தேர்தல் பணிமனை மீது மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவும் ரோம்னியும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒபாமாவுக்காக டென்வர் நகரில் ஒபாமாவின் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனையை நோக்கி மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் திடீரென சுட்டான். இதில் ஒபாமாவின் பணிமனை கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

ஆனால் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமேற்படவில்லை. மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அவன் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினான் என்பது மர்மமாக இருந்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி ஒபாமா பணிமனைத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.