சுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே

பிரான்ஸில் நடந்து வரும் ஸ்கோர்பீன் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கில் தாம் இன்னும் ஒரு கட்சிக்காரராக இருப்பதாக கூறிய மலேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் அதற்கு மாறான குற்றச்சாட்டுகள் “தீய நோக்கம் கொண்டவை என்பதோடு அவை ஒட்டுமொத்த பொய்யாகும்”, என்று சுவாராம் அலுவலக உறுப்பினர் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சுவாராம்  நிறுவனரும் இயக்குனருமான குவா கியா சூங் அவ்வழக்கில் வாதி என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை ஃபாடியா காட்டினார். ஏப்ரல் 14 ஆம் தேதி இடப்பட்டுள்ள அந்த  ஆவணங்களை நீதிமன்ற ஆவணங்கள் என்றும் அவர் கூறினார்.

“வழக்கின் முன்னேற்றத்தை நீங்கள் கவனித்து வந்திருந்தால், ஏப்ரல் 19 ஆம் தேதி நாங்கள் நீதிபதியின்முன் சாட்சியம் அளித்திருப்பதைக் கண்டிருக்கலாம்.

“நாங்கள் கூறியதை நீதிபதி செவிமடுத்தார். மேலும் நீதிமன்ற நடவடிக்கையை தொடர்வதற்காக சாட்சிகளின் பட்டியல் ஒன்றும் நீதிபதியிடம் அளிக்கப்பட்டது”, என்றாரவர்.