போலீஸ் சட்டத்துறைத் தலைவர் மீதான நூலை இன்னமும் ஆராய்கிறது

சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் குறித்து Tan Sri Gani Patail: Pemalsu, Penipu, Penjenayah (டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேய்ல்: மோசடிக்காரர், பொய்யர், குற்றவாளி) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலை போலீசார் இன்னமும் ஆராய்ந்து வருகிறார்கள்.

அந்நூல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள விரும்பிய ஈப்போ தீமோர் எம்பி லிம் கிட் சியாங்குக்குப் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் எழுத்து மூலமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லிம், சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட், சாபா முதலமைச்சர் மூசா அமான் ஆகியோர்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்.

கனி, தயிப், மூசா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பிரதமர் நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் விவரிக்க வேண்டும் என லிம் வலியுறுத்தியிருந்தார்.

ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனலின் அறிக்கை,ஊழல் கடந்த மூன்றாண்டுகளில் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதைச் சுட்டிக்காட்டுவதாக லிம் குறிப்பிட்டார்.

 

TAGS: