பெர்சே செயல்குழு உறுப்பினர் சாபாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே 2.0-இன் இன்னொரு உயர்நிலை உறுப்பினருக்கும் சாபாவுக்குள் அடியெடுத்து வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் அஹ்மட் ஷுக்ரி அப் ரெஜாப் இன்று காலை சாபாவுக்குள் நுழைய முற்பட்டபோது மாநிலக் குடிநுழைவு அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.

மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, இன்று காலை மணி 10.30க்கு ஐந்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் தம்மைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்தார்.

“சாபா முதலமைச்சர் (மூசா அமான்) அலுவலகத்தினர்  நான் சாபா செல்லத் தடை விதித்திருப்பதாகக் கூறினர்”, என்றாரவர்.

TAGS: