கிர் தோயோ: நான் மன்னிப்புக் கேட்டது சிலாங்கூர் அம்னோவையும் பிஎன் –னையும் பாதிக்காது

சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ-விடம் தாம் மன்னிப்புக் கேட்டது அந்த மாநிலத்தில் உள்ள பிஎன் -னையும் அம்னோவையும் எந்த வகையிலும் பாதிகாது என முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகமட் கிர் தோயோ கூறியிருக்கிறார்.

“நான் இப்போது மாநில அம்னோ தலைவர் இல்லை என்பதால் நான் மன்னிப்புக் கேட்டது அம்னோவையும் பிஎன் -னையும் பாதிக்காது என நான் நம்புகிறேன்,” என நேற்று அவர் தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

விபச்சார மய்யம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஒர் இடத்திற்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு ரோனி லியூ தடையாக இருந்தார் என தாம் தவறாக குற்றம் சாட்டியதற்காக நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கிர் தோயோ, லியூவிடம் மன்னிப்பு கேட்டார்.