அசாஞ்சுக்கு உடல் நலக்குறைவு என்கிறது எக்வடோர் அரசு

விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் உடல் நிலை குறித்து தாம் பெரிதும் கவலை அடைந்திருப்பதாக எக்வடோர் அரசு கூறுகிறது.

அசாஞ்ச், ஸ்வீடன் நாட்டுக்கு விசாரணைக்காக அனுப்பப்படுவதைத் தவிர்க்க லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாஞ்சின் உடல் எடை குறைந்திருக்கிறது என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படலாம் என்றும் எக்வடோர் அரசு கூறுகிறது.

ஆனால் அசாஞ்ச் தூதரகத்திலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்தால், அவர் கைது செய்யப்படுவார் என்று பிரிட்டன் கூறுகிறது.

ஸ்வீடனில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அசாஞ்ச் ஸ்வீடன் அதிகாரிகளால் தேடப்படுகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அசாஞ்ச் மறுக்கிறார்.