மியான்மர் நாட்டில் மீண்டும் இனக்கலவரம் வெடித்தது

ரங்கூன் : மியான்மர் நாட்டில் கடந்த ஜூன் மாதம் 2 இனத்தினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஒரு இனத்தை சேர்ந்த பெண்ணை மற்றொரு இனத்தினர் கற்பழித்து விட்டதாக பரவிய தகவலை அடுத்து இந்த கலவரம் மூண்டது. இதில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்காள தேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இதன் பிறகு 2 மாதமாக அமைதி நிலவி வந்தது. இதனால் வங்காள தேசத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் நாடு திரும்ப தொடங்கினார்கள்.

இந்த நிலையில் அங்கு மீண்டும் இனக்கலவரம் வெடித்து உள்ளது. அதில் 4 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரம் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து பல இடங்களிலும் கலவரம் பரவி உள்ளது. கலவரத்தை தடுக்க மின்மயா, மருக்கோ ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.