கோவில் தலைவர்கள் 5 ஆண்டுகள் மேலாக பதவியில் இருக்கக்கூடாது

மலேசியாவின் மாபெரும் இந்து வழிபாட்டு தலமாகிய பத்துமலை முருகன் திருக்கோவிலின் பூர்வீகம், தைபூச திருநாளில் பதினைந்து இலச்சத்திக்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடும் இந்த திருத்தலம் ஒரு சுயநல தனி நபரின் ஆதிக்கத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக இருப்பதோடு, பணம் சம்பாதிக்கும் இடமாகவும் இப்பொழுது அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் மாறி உள்ளது.

நடராஜா என்ற ஒரு தனிநபர் இந்த திருத்தலத்தையும் கோலாலம்பூர் நகர மஹா மாரியம்மன் திருகொவிலையும் தன்னுடைய சொந்த சொத்துபோல நடத்தி வருகிறார். நவம்பர் 2007-ல் இண்ட்ராப் அமைதி போராட்டத்திக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்த இந்துக்கள் பத்து மலை ஆலய வளாகத்தில் தங்கி, துயிலுறங்கும் சமயத்தில் பிரதான கதவை மூடி காவல்துறையிடம்  புகார்  பண்ணி  இந்த வெளியூர் இந்துக்களை  பெரும் சித்திரவதைக்குள்ளாகியவர் இந்த நடராஜா.

இப்பொழுது பத்துமலை திருமுருகன் கோவிலுக்கு வந்த ஆபத்து தேசிய முன்னணி காலத்தில் ஏற்பட்டவையே தவிர இப்பொழுது சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் மக்கள் கூட்டணியால் அல்ல என்று இந்த சுயநலவாதிக்கு நன்றாக தெரிந்தும் தன் சொந்த அரசியல் இலாபத்திக்கும், தன் எஜமானர் (தானைத் தலைவர்) சாமிவேலு, நாட்டு பிரதமர் நஜிப் ஆகியோரின் நன்மைக்காக இப்பொழுது இந்த 29 மாடி கட்டிட பிரச்னையை மிக பெரிதாகாக்கி உள்ளார்.

இந்த கட்டிடத்திக்கு 2007-இல்  இவர் தேசிய முன்னணி அனுமதி கொடுத்தபோதே அதை எதிர்த்து இருக்க வேண்டியவர் இப்பொழுது பொதுத்தேர்தல் வருகின்ற சமயத்தில் ஏன் எதிர்க்க வேண்டும்?

இவரைப்  போன்றவர்களை மலேசிய இந்துக்கள், ஆலயங்களை நிர்வாகிக்கும் பொறுப்பில் இருந்து தூக்கி வீச வேண்டும்.  கடவுளின் பெயரை சொல்லி மக்களின் பணத்தில் பெரும் பணக்காரனனாயிருக்கும் இவர் போன்றோருக்கு இது ஒரு நல்ல பாடமாக விளங்கும்.

அத்தோடு எந்த ஒரு கோவில் தலைவரும் ஐந்து ஆண்டுகள் மேலாக பதவியில் இருக்கக்கூடாது.  இதை எல்லா கோவில்களும் கடைபிடித்தால் கோவில்களில் தலைவர்கள் சர்வதிகாரம் செலுத்த முடியாமல் போவதோடு  அங்கு ஊழல் நடப்பதும், கோவில்கள் அரசியல் தலங்களாக பயன்படுத்தபடுவதும் பெரிதும் குறையும்.

இந்து கோவில்களில் முதல் மரியாதை எல்லாம் இறைவனுக்கே. எந்த ஒரு அரசியல்வாதிகளுக்கும் கோவில்களில் மரியாதை, மாலை போடுதல் கூடவே கூடாது. எல்லா அரசியல் நிகழ்ச்சிகளும் கோவில்களின் வெளியில் தான் நடத்தப்பட வேண்டும். இந்து கோவில்களில் எல்லா பக்தர்களும் சரி சமமாக நடத்த வேண்டும். அர்ச்சகர்கள் இதை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். சமய தொடர்புள்ள நிகழ்சிகளே கோவில்களில் நடத்த வேண்டும். இதை எல்லா கோவில்களில் கடை பிடித்தால் இந்துகளிடம் வீண் பிரச்னைகள் ஏற்படுவதும் குறையும். இந்து மதமும் நன்கு வளர்ச்சி அடையும்.

-Santhiny Karanraj

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272