இரட்டை வரி: மிக அதிகமான கார் விலைகளுக்குக் காரணம்

“கார்கள் சொத்துக்கள் எனப் பலர் எண்ணுகின்றனர். கார்கள் உண்மையில் கடன் பொறுப்புக்களாகும். ஏனெனில் அவற்றின் மதிப்பு அந்த வாங்கப்பட்ட முதல் நாள் தொடக்கம் வேகமாகக் குறைகிறது.”

“உயர்வான கார் விலைகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது தீர்வாகாது

Guna Otak Sikit: தற்காக்க முடியாதை தற்காக்க அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட் முயலுகிறார் அல்லது மலேசியாவில் கார் விலைகள் மிக அதிகமாக இருப்பதற்கு பரிதாபமான காரணங்களைச் சொல்ல முயலுகிறார்.

வரிகள் மிக அதிகமாக இருப்பதே கார் விலைகள் உயர்வாக இருப்பதற்குக் காரணம் என பல மலேசியர்களுக்குத் தெரியும். அதுவும் உருப்படாத கார் தயாரிப்புத் தொழிலை உருவாக்க முன்னாள் பிரதமர் முயன்றதால் ஏற்பட்ட வினை. உதவித் தொகையை எப்போதும் நம்பியிருக்கும் ஒரு தொழில் எப்படி முன்னேற முடியும் ?

அகந்தை கொண்ட முன்னாள் பிரதமருடைய முட்டாள்தனமான மாபெரும் திட்டத்துக்கு மலேசியர்கள் பெரும் விலை கொடுத்து வருகின்றனர்.

அடையாளம் இல்லாதவன்#007: மிக அதிகமான வரிகளும் ‘கட்டாய உபரிப் பாகங்களுக்கான’ விலைகளும் பட்டியிலிடப்பட்ட போது மொத்த விற்பனை விலையை பிரித்து பிரித்துக் காட்ட வேண்டாம் என அரசாங்கம் விநியோகிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டது எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. (பொது மக்களுடைய ஆத்திரத்தை தவிர்ப்பதற்கு)

என்றாலும் ‘வரிகளை’ செலுத்துவதற்காக கடன் வாங்குமாறு கார் வாங்குவோரை அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் அரசாங்கம் இன்று வரிகளை செலவு செய்யும் வேலையில் அடுத்த 9 ஆண்டுகளுக்கு மக்கள் வரிகளை செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

விவேகமானவன்: 1970ம் ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. அது படிப்படியாக ஐந்து ஆண்டுகளாகவும் ஏழு ஆண்டுகளாகவும் இப்போது 9 ஆண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மலேசியர்களை மூன்று விஷயங்கள் பாதித்துள்ளன. கடந்த ஆண்டுகளில் கார் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளன. அரசாங்க வரிகள் 100 விழுக்காட்டை எட்டியுள்ளது. செலவுகளும் கூடியுள்ளன.

இரண்டாவதாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கார் உரிமைகயாளர்கள் மாதாந்திரத் தவணைப் பணத்துடன் அதிகரித்து விட்ட கார் பராமரிப்புச் செலவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

மூன்றாவதாக நமது ஊதியங்கள் தேக்கமடைந்துள்ளன அல்லது மிக மெதுவாக உயருகின்றன. ஊதிய உயர்வுக்கு அளவுகோலாக பயனீட்டாளர் விலைப் பட்டியல் குறியீடு பயன்படுத்தப்படுவது இல்லை. அமைச்சர் சிந்திக்கத் தவறி விட்டார்.

ஈப்போ2: திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது என்பது வங்கிகளுக்கு அதிக வட்டி கிடைக்கும் என அர்த்தமாகும். காரணம் தவணைக் கொள்முதல் வட்டி கடன் தொடங்கிய நாள் முதல் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கணக்கிடப்படுகின்றது. அது வீடுகளைப் போன்று அசல் குறைக்கப்படுவதில்லை.

பெரும்பாலான மக்களுக்கு பொதுப் போக்குவரத்து கிடைக்காததாலும் போதுமான அளவுக்கு இல்லாததாலும் கார்கள் தவிர்க்க முடியாத போக்குவரத்து அம்சங்களாகி விட்டன.

அத்துடன் கார்கள் சொத்துக்கள் எனப் பலர் எண்ணுவதும் துரதிர்ஷ்ட வசமான விஷயமாகும். கார்கள் உண்மையில் கடன் பொறுப்புக்களாகும். ஏனெனில் அவற்றின் மதிப்பு அந்த வாங்கப்பட்ட முதல் நாள் தொடக்கம் வேகமாகக் குறைகிறது.

மிக்கி: நீண்ட காலத்துக்குப் பணத்தைச் செலுத்துமாறும் ‘சரளமான கடன்களை’ பயன்படுத்துமாறும் ( முதலி ல் கொஞ்சமாக கொடுப்பது பின்னர் உங்கள் ஊதியம் உயரும் போது அதிகமாகக் கொடுப்பது ) மலேசியர்களைக் கேட்டுக் கொள்வது மக்களை ஒரு வகையான நிதி அடிமைகாளக்குவதற்கு ஒப்பாகும். ராபிஸி அவர்களே மக்களைக் காப்பாற்றுங்கள்.

ஒஸ்கார் கிலோ: எங்களுக்கு கார்களை சந்தை விலைக்குத் தாருங்கள். பெட்ரோலையும் சந்தை விலைக்குக் கொடுங்கள். அப்போது என் பணத்தை எப்படிச் செலவு செய்வது என்பதை நான் முடிவு செய்ய இயலும்.

நான் என்னுடைய தாய்லாந்து அண்டை நாட்டவரைப் போன்று அதே விலையில் காரை வாங்க அனுமதியுங்கள். நான் காரை ஒட்டினால் விலை அதிகமான பெட்ரோலை நான் பயன்படுத்த வேண்டும். நான் ஒட்டவில்லை என்றால் விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

அந்தச் சூழ்நிலை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு ஊக்கமூட்டும்.

ஆத்திரமடைந்துள்ள_ வாக்காளர்: இதனைக் கேட்பதற்காக எங்களை மன்னியுங்கள். இந்த அரசாங்கம்எப்போதாவது பிரச்னையைத் தீர்த்துள்ளதா ?

கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது என்பது மக்களுக்கு அதிகமான சுமை என அர்த்தம். முட்டாளே.

 

TAGS: