பினாங்கு துணை முதலமைச்சருடனான 10 மில்லியன் ரிங்கிட் வழக்கை தி ஸ்டார் நாளேடு தீர்த்துக் கொண்டுள்ளது

பினாங்கு துணை முதலமைச்சர் II பி ராமசாமி தி ஸ்டார் நாளேட்டின் நிருபர் ஒருவருக்கு எதிராகவும் அந்த நாளேட்டின் வெளியீட்டாளருக்கு எதிராகவும் தொடுத்திருந்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டுள்ளார்.

அவர் இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த வழக்கை சமர்பித்திருந்தார்.

கடந்த ஆண்டு அந்த நாளேட்டில் வெளியான இரண்டு கட்டுரைகள் தொடர்பில் ராமசாமி பிப்ரவரி மாதம் அந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.

அந்தத் தீர்வை அவரது வழக்குரைஞர் ஏ சிவநேசன் அறிவித்தார். அந்தத் தீர்வு விவரங்களை வெளியிடுவதில்லை என இரண்டு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக சிவநேசன் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

அந்த வழக்கில் சிவநேசனுடன் வழக்குரைஞர் ஆர் கெங்காதரனும் ஆஜரானார்.

அந்தத் தகவலை மசீச-வுக்குச் சொந்தமான அந்த நாளேட்டுக்கு ஆஜரான வழக்குரைஞர் பாக் சிங் உறுதி செய்தார். அந்தத் தீர்வை உயர் நீதிமன்ற நீதிபதி வி டி சிங்கம் பதிவு செய்தார்.

TAGS: