பிஎன்: பக்காத்தான் ரகசிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளன

13வது பொதுத் தேர்தலுக்கான எதிரிகளுடைய ரகசிய வியூக ஆவணங்களை பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஒரே கூட்டணி பக்காத்தான் ராக்யாட் மட்டுமல்ல.

பக்காத்தானுடைய ரகசிய ஆவணங்கள்- அதன் வேட்பாளர் பட்டியல் உட்பட ஆளும் கூட்டரசு கூட்டணியிடம் உள்ளதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்குன் அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.

“ஆனால் நாங்கள் மற்ற தரப்பைப் போலக் கூச்சல் போடுவதில்லை,” என அவர் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

பினாங்கில் பிஎன் தேர்தல் ஏற்பாடுகள் பற்றிய ரகசிய ஆவணங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கடந்த வாரம் கூறிக் கொண்டிருந்தார். அந்த மாநிலத்தில் மலாய் அல்லாத பகுதிகளில் பிரச்சார, செய்வதற்கு பிஎன் முழுமையான ஆயத்த நிலையில் இல்லை என்பதை அந்த ஆவணங்கள் காட்டுவதாகக் கூறப்பட்டது.

 

TAGS: