மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் அம்னோ கிரிஸ் கத்தியை உயர்த்துமா ?

‘கட்சி மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கைவிரல் ரேகை அடையாள முறையை அமல்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு விநோதமாகத் தெரிகிறது

அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்திலிருந்து ‘விரும்பத்தகாதவர்களை’ தடுக்க புதிய அடையாள முறை

பெர்ட் தான்: எதிர் வரும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டமும் ‘பழைய மாதிரியே’ இருக்கப் போகிறது. உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தமது கிரிஸ் கத்தியை உயர்த்திக் காட்டி அதனை முத்தமிடப் போகிறார். ஆனால் இந்த முறை அதனை உறுப்பினர்கள் மட்டுமே பார்க்க முடியும். நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பு இருக்காது.

ஆகவே அவர்கள் சொந்தக் களியாட்டத்தில் ஈடுபடலாம்- தங்களது இனவாதப் பேச்சுக்கள் மூலம் உறுப்பினர்களுக்கு மன மகிழ்ச்சியை அளித்து அவர்களை ‘பெருமை’ கொள்ளச் செய்யலாம். சிறுபான்மை இனங்களுக்கு எதிராக எழுப்பப்படும் உணர்ச்சிகரமான எந்தப் பிரச்னைக்கும் மக்களிடமிருந்து எதிர்ப்பு ஏற்படும் என்ற அச்சமின்றியும் விதி விலக்குப் பெற்றதைப் போல அது நடத்தப்படும்.

அதனை உள்ளூர் பாணியில் சொன்னால் ‘syiok sendiri’ நிகழ்வாகும்.

ஜெரோனிமோ: மீண்டும் ஒரு சர்க்கஸ் நகரத்துக்கு வரவிருக்கிறது என நீங்கள் சொல்கின்றீர்களா ? இந்த முறை யார் கோமாளிகள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அண்மையில் முடிந்த சீன சர்க்கஸில் ஹுடுட் எதிர்ப்புக் காட்சிகள் அரங்கேறின. இரண்டு நாள் முழுவதும் ஒரே வசனங்கள் தான். அம்னோ கிறிஸ்துவ எதிர்ப்புக் காட்சிகளை நடத்துமா ?

கட்சி மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கைவிரல் ரேகை அடையாள முறையை அமல்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு விநோதமாகத் தெரிகிறது. இது தான் முதன் முறை. மலேசியா போலே !

குழப்பம் இல்லாதவன்: வெளிப்படையான போக்கை விடாமல் வலியுறுத்தி வருகின்ற ஒர் அரசாங்கத்திடமிருந்து இந்தத் தகவல் வந்துள்ளது. தங்களது வாதங்களை மற்றவர்கள் செவிமடுக்கக் கூடாது என்பதில் அது மிகவும் கவனமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் கிரிஸ் உயர்த்திக் காட்டப்படும். அது பற்றி நாம் அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் சாதாரண அம்னோ உறுப்பினருடைய சிந்தனை நமக்கு நன்கு தெரியும். அது மக்கள் பயனீட்டுக்கு அல்ல.

அம்னோ நாளுக்கு நாள் பொருத்தமில்லாத நிலையை எட்டி வருகிறது. எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர அது தயாராகி வருவதாகத் தோன்றுகிறது.

அன்கோரா: அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் ஒர் உள் விவகாரம் தேசிய அளவிலானது அல்ல என்றஉண்மையை அந்தக் கட்சி ஒரு வழியாக, கடைசியில் உணர்ந்துள்ளது.

IKn.w: எல்லா அம்னோ உறுப்பினர்களும் சந்தோஷமாக இருக்கப் போவதில்லை. அதனால் அம்னோ கூட்ட விவாதங்கள் வெளியில் கசிந்து விடும். ஆகவே என்ன நடவடிக்கை எடுத்தாலும் விவாதங்கள் மக்களுக்குத் தெரிந்து விடும்.

YF: அம்னோ தூய்மையானதாக இருந்தால் மறைப்பதற்கு எதுவும் இருக்காது. எனவே திறந்த போக்கை நிராகரிப்பதின் மூலம் தாங்கள் மோசடிக்காரர்கள் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

மோசடிக்காரர்களே தங்கள் வேலைகளை ரகசியமாகச் செய்வார்கள். அம்னோ அதனைத் தான் செய்கின்றது.

 

TAGS: