பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் : பிரச்னையை பெரியதாக்கியது யார்?

பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் குறித்து கருத்து கூறுபவர்கள் முதலில் ஒன்றை புரிஞ்சிக்கனும். பத்துமலை திருத்தலத்திற்கு பிரச்சனை என்றால் முதலில் கோயில் தலைவர் நடராஜா என்ன செய்திருக்கனும்; மாநில பொறுப்பாளர்களை சந்தித்து அதற்க்கு தீர்வு கண்டிருக்கனும், ஏன்னா அது மாநிலத்திற்கு உட்ப்பட்டது . அப்படி முடியாம போயி இருந்தா? மக்களை அழைத்து விசியத்தை சொல்லியிருந்தா விசியம் வேறுவிதமாக போயிருக்கும்.

மாநில அரசிடம் பணம் வாங்க மட்டும் தெரியும் ஆனால் அவர்களை மதிக்க மட்டும் தெரியாது ? இப்ப ஒன்னும் குடி முழ்கி போய்விட வில்லை. அந்த திட்டத்தை நிறுத்துவதற்கான வேலைகளை மாநில அரசு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இந்த பிரச்சனையை யார் பெரியதாக்கியது ? ‘சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி’ என்பதை போல் நடராஜா சாமிவேலை வைத்துக்கொண்டு குத்தாட்டம் போட்டார்! இப்ப நாடே சிரிக்குது.

இன்னோரு விசியம் தெரியும்தானே, எப்பிங்காம் தமிழ்ப் பள்ளி நில பிரச்சனை. டேவேலப்பர் கொடுத்தது ஆறு ஏக்கர். அதில மூனு ஏக்கர் திருடிகிட்டது யாரு ? சரி அப்படி சொல்ல வேண்டாம். கையாண்டது, எடுத்துகிட்டது யாரு ?

பிரச்சனை வந்தவுடன் சமுதாய பெரும் தலைவர்கள் என்ன செய்திருக்கனும் ஏதோ எங்கோ தவறு நடந்து விட்டது ஆகையால் அந்த மூனு ஏக்கரை மீண்டும் பள்ளிக்கே தந்து விடுகிறோம் என்று சொல்லி இருந்தால் கௌரவமாக இருந்திருக்கும் ? அட பள்ளி நிர்வாகம் எதை எதிர்ப்பார்க்கிறார்களோ அதையே செய்து கொடுக்கிறோம் என்று சொல்லி இருந்தாலும் நல்ல மதிப்பு ஏற்பட்டுயிருக்கும். அதை விடுத்து விடுதி கட்டி மாணவர்களை தங்க வைக்க போகிறோம் என்கிறார்கள் என்ன வேடிக்கையா ? முன்பு வெண்டோ கல்லூரியை வாங்கி கொண்டோமினியம் கட்டினார்களே அதுபோல!

இதை எழுதும் போது ஒரு பாடல் நினைவுக்கு வந்தது; “காட்டு புலியை வீட்டில் வைத்தாலும், கறியும் சோறும் கலந்து வைத்தாலும், குரங்கு கையில் மாலையை கொடுத்து கோபுரத்தின் மேல் நிக்க வைத்தாலும்…” மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.

இதுதான் நமது பெரும் தலைவர்களின் சாதனை! அமைதியாக செய்ய வேண்டியதை ஆர்ப்பாட்டத்தோடு செய்ய வேண்டியிருக்கு ?

-SEERIAN

———————————————————————————————————————————————————————

உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.

எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:  [email protected]   / தொலைநகல் : 03-26918272