இலவச விருந்துகள் ஆதரவுக்கு அளவுகோல் அல்ல

“சீனப் பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை என்ற போர்வை இல்லாவிட்டால்  மசீச உறுப்பினர்களும் அவர்களது சேவகர்களும் மட்டுமே கலந்து கொண்டிருப்பர்.”

மசீச விருந்திலிருந்து மக்கள் வெளியேறியது ஆதரவு நலிவாக இருப்பதைக் காட்டவில்லை

ஒடின்: மசீச துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய்-யும் பிஎன் -னில் உள்ளவர்களும் திருடுவது, ஏமாற்றுவது, மிரட்டுவது ஆகியவற்றுடன் பொய் சொல்வது, சொந்தமாக கற்பனை செய்து கொள்வது போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருந்துக்குப் பின்னர் உங்கள் தலைவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது உங்களுடைய மூவாயிரம் விருந்தினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். உங்கள் தலைவருக்கு அவர்கள் மதிப்பளிக்கவில்லை என்பதையே அது காட்டுகின்றது. அத்துடன் அவர் சொல்லப் போவதைக் கேட்கவும் அந்த விருந்தினர்கள் தயாராக இல்லை.

ஏற்கனவே கட்டணம் செலுத்தப்பட்டு விட்ட உணவை உட்கொள்ளவே அவர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள், நீங்கள் உங்கள் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அடையாளம் இல்லாதவன்#41809171: “ஒருவர் அந்த நிகழ்விலிருந்து வெளியேறினால் கடுமையான பிரச்னை இருப்பதாக எண்ணக் கூடாது. அத்துடன் கூட்டத்தினர் எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் கருதக் கூடாது,” என்கிறார் லியாவ்.

உண்மையா ? மசீச தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்தவர்களில் 20 விழுக்காட்டினர் வெளியேறினால் கூடவா ? நான் எண்ணுவதைக் காட்டிலும் நீங்கள் மிக அதிகமான கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

கிறிச்: மசீச தலைவர் பேசிய போது பல விருந்தினர்கள் தங்களுக்கு உரையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் தலைவர் உரைக்கு செவி கொடுக்கவே இல்லை. பல மேசைகள் காலியாக இருந்தன. பல மேசைகளில் ஐந்து பேருக்கும் குறைவாகவே இருந்தார்கள்.

மசீச உறுப்பினர்கள் விருந்து டிக்கெட்டுக்களை இலவசமாக விநியோகம் செய்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பலர் அடுத்த நாள் 100 ரிங்கிட் கொடுத்து டிஏபி விருந்தில் கலந்து கொள்வதையே விரும்பினர்.

சீனப் பள்ளிக்கூடத்துக்கு நன்கொடை என்ற போர்வை இல்லாவிட்டால்  மசீச உறுப்பினர்களும் அவர்களது சேவகர்களும் மட்டுமே கலந்து கொண்டிருப்பர்.

YF: அம்னோ உன் காதுக்கு அது எட்டியதா ? ஜோகூருக்கு சீன மந்திரி புசார் நியமிக்கப்பட்டால் அம்னோவை விட்டு விலக தயாராக இருப்பதாக சுவா அறிவித்துள்ளார். சுவா இஸ்லாத்தை மட்டும் பழிக்கவில்லை. அம்னோ அதிகாரத்தை இழந்தால் அம்னோவை விட்டு போகப் போவதாகவும் இப்போது கூறியுள்ளார்.

ஆகவே அம்னோ நீங்கள் இன்னும் சுவாவுடனும் மசீச-வுடனும் ஒட்டிக் கொண்டிருக்க விரும்புகின்றீர்களா ?

அவர்கள் விசுவாசமான பங்காளிகள் என்பதை விட சந்தர்ப்பவாதிகள் என்பதே பொருத்தமான வார்த்தை.

நீலகிரி: மக்கள் ஆதரவு இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. வாக்குகள் எண்ணப்படும் போது தனது நிலை என்ன என்பது மசீச-வுக்கு தெரிந்து விடும்.

இலவச விருந்துகள் ஆதரவுக்கான அளவுகோல் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மசீச நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன் கூட்டியே ஒய்வு பெறுவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அர்மெகடோன்: மசீச விருந்தில் மக்கள் கலந்து கொண்டனர் (அல்லது வேறு எந்த பிஎன் ஆதரவு விருந்து) என்றால் ஒன்று அந்த விருந்து இலவசமாக இருக்க வேண்டும். அல்லது அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதிகாரிகளினால் மிரட்டப்படக் கூடும் என அஞ்சியிருக்க வேண்டும்.

மசீச தொடர்ந்து கனவு காணலாம். பக்காத்தான் ராக்யாட்டைப் போன்று விருந்துக்கு ஏற்பாடு செய்து நன்கொடைகளைக் கேளுங்கள். அப்போது தெரியும் எத்தனை பேர் வருவார்கள் என்பது.

குவினி: லியாவ் அவர்களே, அடுத்த முறை உங்களுக்கு பெரிய கூட்டம் கூட வேண்டும் என விரும்பினால் அந்த விருந்து மசீச-வுக்கு பிரியாவிடை கூறும் விருந்து என அறிவியுங்கள். ஒர் இருக்கையைப் பெறுவதற்கு மக்கள் முண்டியடித்துக் கொள்வதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் விருந்தினர்களிடமிருந்து கட்டனத்தைக் கூட வசூலிக்கலாம்.

 

TAGS: