பிஎன் தவறுகளுக்குப் பரிகாரம்- கோபாலா பாணியில்

உங்கள் கருத்து: “வீட்டில் உள்ள பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்ற திருடனை, அவன் திருடிச்சென்ற பொருள்களைத் திருப்பிக் கொடுத்து செய்த காரியத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பீர்களோ?”

கொண்டோ விவகாரத்தில் பக்காத்தானின் இந்து-எதிர்ப்பு முகம் தெரிகிறது என்கிறார் கோபாலா

சின்னபெரியவன்: பாடாங் செராய் எம்பி என் கோபாலகிருஷ்ணன் சொல்வதிலிருந்தே தெரிகிறது அவருடைய மேதாவித்தனம். பிஎன் அரசியல்வாதிகளே அவரது பேச்சைக் கேட்டுச் சிரிப்பார்கள்.

பிகேஆர் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், டாக்டர் சேவியர் ஜெயகுமார் போன்றோர் இந்து-எதிர்ப்பாளர்கள் என்றால் 2007, நவம்பரில் செலாயாங் நகராட்சி மன்றத்தில் இருந்த பிஎன் பிரதிநிதிகளும் இந்து-எதிர்ப்பாளர்கள்தானா?

அவர்கள்தானே கொண்டோமினியம் கட்டுவது பத்துமலை ஆலையத்தைப் பாதிக்கும் என்பது தெரிந்திருந்தும் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியவர்கள்.

அவர்கள், அன்வாரைக் காட்டிலும் சேவியரைக் காட்டிலும் இன்னும் மோசமான இந்து-எதிர்ப்பாளர்கள் அல்லவா?

பெயரிலி _40f4: அது டொலோமைட் இண்டஸ்ட்ரீசுக்கு கல்லுடைப்புக்காகக் கொடுக்கப்பட்ட நிலம்.

ஆனால்,2005/2006-இல், செலாயாங் நகராட்சி மன்றத்தில் இருந்த பிஎன் பிரதிநிதிகளின் முழு ஒப்புதலுடன் வணிகம்/குடியிருப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிலத்தின் தகுதி மாற்றப்பட்டது.

பிறகு 2007/2008-இல், அங்கு கட்டிடம் கட்டுவதற்கும் பிஎன் பிரதிநிதிகள்தாம் முழு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஏன் என்னன்னமோ கதை சொல்கிறார்கள்.

சீ ஹோ சியு: எல்லாமே தடயங்களும் கொண்டோ கட்ட அனுமதி கொடுத்தது  பிஎன்தான் என்பதைக் காட்டுகின்றன.

இந்தியர்களுக்காகவே இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மஇகா 50 ஆண்டுகளாக அவர்களின் நலனுக்காக போராடாமல் இருந்தது ஏன்? தேர்தலில் தோல்வி ஏற்பட்டதும்தான் போராட வேகம் பிறந்ததா?

தொலு: கோபாலகிருஷ்ணனின் பேச்சே அவர் ஒரு கபடதாரி, சந்தர்ப்பவாதி என்பதைக் காண்பிக்கிறது.

பினாங்கில் பள்ளிவாசல், ஆலய பிரச்னை பற்றி இப்போது  குறிப்பிடுகிறீர். .அதற்குப் பிறகுதானே நீர் பிகேஆரில் சேர்ந்தீர். அப்போது உம் கொள்கை என்னவாயிற்று?

அப்புறம் ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதன். ஐயா, மஇகாவுக்கு நீங்கள் தேவைப்படலாம். ஆனால், நீங்கள் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தியர்களுக்கு நீங்களோ மஇகா-வோ தேவையில்லை.

திசியா: கோபாலகிருஷ்ணன் வாயைத் திறக்காமலிருப்பதுதான் நல்லது. வாயைத் திறந்தால் அசடுதான் வழிகிறது. அம்னோ-பிஎன் பலவற்றைக் கவனிக்கத் தவறியது என்று அவர் சொல்வது முற்றிலும் உண்மை. அவர்களின் கவனம் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதில்தான் இருந்தது.

இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், அம்னோ-பிஎன் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள மீண்டும் அவர்களுக்கே வாக்களிக்கச் சொல்வதுதான். 50-ஆண்டுகள் பட்டது போதாதா?

ஆரீஸ்:  இப்படிப்பட்ட ஒரு திறமைசாலியை எங்கிருந்து கண்டுபிடித்து ஒரு வேட்பாளராக களமிறக்கியது பிகேஆர்?

நடந்துவிட்ட தவறுகளுக்கு நஜிப் வருந்துவதாகவும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் கோபால். அப்படியானால் இழைக்கப்பட்ட பல அநீதிகளுக்கும் மக்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளுக்கும் பரிகாரம் செய்ய தயாராக இருக்கிறாரா?

பிகேஆருக்கு ஒரு வார்த்தை. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையாக இருங்கள். தவளைகளை மறக்க வேண்டாம்.

எச்ஒய்எல்: ஒரு கொலைகாரனை மன்னிப்பீர்களா? வீட்டில் உள்ள பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்ற திருடனை, அவன் திருடிச்சென்ற பொருள்களைத் திருப்பிக் கொடுத்து செய்த காரியத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பீர்களோ?

பிஎன் 53 ஆண்டுகளுக்குமேலாக நாட்டை ஆண்டுவிட்டது. இக்காலத்தில் அது செய்த நன்மைகளைவிட தீமைகளே அதிகம்.

மூங்கில்: 55 ஆண்டுகளாக இந்தியர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்களே அதற்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறீர்கள்?

முதலில் பிஎன்னை வெளியேற்ற வேண்டும். பிஎன் சில சலுகைகள் கொடுப்பதை எண்ணி ஏமாற வேண்டாம்.

காகிதரோஜா: ஒரு தடவை பட்டாயிற்று. அது போதும். செய்த தவறுகளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு பிஎன்னுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னரே, அதைக் கேட்டு அடக்கமுடியாத சிரிப்புத்தான் வந்தது.

மூஷிரோ: பிஎன் செய்த தவறுகளைத் திருத்தும் வாய்ப்பை பக்காத்தானுக்குக் கொடுத்தால் என்ன? பினாங்கிலும் சிலாங்கூரிலும் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றங்கள்தான் தெளிவாகத் தெரிகின்றனவே.

 

 

 

 

TAGS: