பாலர்கல்விக்காக ஸ்ரீமுருகன் நிலையதிற்கு ரிம 28 மில்லியன் கொடுக்கப்பட்டதா?

SMC Najibதற்காலிக அரசாங்க ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு பாலர்கல்வி பிரச்சனையை கலைய முடியாது பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை என்ற செம்பருத்தியின் கட்டுரையில் உள்ள சில தகவல்களுக்கு திருத்தம் தேவை என்ற வகையில் வே. இளஞ்செழியன் வழங்கிய தகவல்கள் இவை, அதோடு. பாலர்  கல்விக்காக ஸ்ரீமுருகன் நிறுவனத்திற்கு ரிம 28 மில்லியன் ஒதுக்கப்பட்ஒதுக்கப்பட்டதா என்ற வினாவையும் தொடுக்கிறார்.

1) ஒரு சிறார் பள்ளி மாணவனைக் கற்பிக்க அரசாங்கம் ஏறத்தாழ ரிம 4,000ஐச் செலவிடுகின்றது. ஆகவே, 30,000 சிறுவர்களுக்குக் கல்வி வழங்க ஆண்டுக்குக் குறைந்தது ரிம 120 மில்லியன் தேவைப்படும்.

2) இந்த 30,000 மாணவர்களில், ஏறக்குறைய 8,000 சிறுவர்கள் அரசாங்கம் நடத்தும் சிறார் பள்ளிகளில் கற்கின்றனர் என்று கணிக்கலாம். மீதமுள்ள 22,000 சிறுவர்களில், 10,000 பேர் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர்; மற்றவர்கள் எங்கும் பயிலவில்லை என்று கருதலாம்.

3) அரசாங்கச் சிறார் பள்ளிகளில் ஏறக்குறைய 490,000 குழந்தைகளில் கற்றனர் என கல்வியமைச்சின் கணக்கு காட்டுகின்றது. (காண்க:http://emisportal.moe.gov.my/emis/emis2/emisportal2/doc/fckeditor/File/Quickfacts_2013/quickfacts2013.pdf ) இத்தொகையை அதிகரிக்க கல்வியமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லையென நம்புகிறேன்.

4) பேரா. இராஜேந்திரனின் திட்டத்தில் குறைந்தது 300 சிறார் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளி வலாகங்களில் அமைக்கும்படி கேட்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன்.

elanjeliyan5) 2014 ஆம் ஆண்டிற்கான அரசாங்க வரவு செலவு கணக்கில் 176 தமிழ் சிறார் பள்ளிகளுக்காக ரிம 28 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. (காண்க: https://www.pmo.gov.my/?menu=speech&page=1676&news_id=680&speech_cat=2 ) இத்தொகை எந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்டதென்று துள்ளியமாகச் சொல்ல முடியவில்லை. ஸ்ரீமுருகன் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதாகக் கேள்வி. ஸ்ரீமுருகனுக்கும் சிறார் பள்ளிக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியும் கூடவே நமக்கு எழுந்தாலும், இதுவரை அப்பணம் எங்கும் தலைகாட்டியதாக அடையாளமில்லை.

தமிழினியின் பதில் – இங்கே சொடுக்கவும்