கோத்தபாய இராஜ பக்சே மலேசிய வருகை கண்டனதிற்குறியது

gotabaya_AFPதமிழர்களைக் இனப்படுகொலை செய்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜ பக்சேவை மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் நேற்று மாலை புத்திரஜெயாவில் சந்தித்து பேசியதாதாக பெர்னாமா அறிக்கை கூறுகிறது.   

ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இதற்கு முன்பு வாக்களித்த மலேசியா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மூலம் கோத்தபாய இராஜ பக்சேவை சந்திருப்பதன் வழி தனது கோர முகத்தை வெளிகாட்டியிருக்கிறது.

மலேசியத் தமிழர்கள் தங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை மீண்டும் மலேசிய பிரதமர் நிருபிப்பதா இந்நிகழ்வு அமைந்துள்ளது.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளில் மிக முக்கியமானவர் இந்த கோத்தபாய இராஜ பக்சே. இவர் சிறீலங்கா பிரதமர் இராஜ பக்சேவின் சகோதரரும் ஆவார். பலமுறை தமிழர் இனப்படுகொலை குறித்து ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவந்த போதெல்லாம் அதை திசை திருப்பி உலக அரங்கில் மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கையாண்டவர்கள் கோத்தபாய இராஜ பக்சே முக்கியமானவர். சமூக போராளிகள் பலரை இந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ள வரலாற்றை கொண்டுள்ள மலேசிய அரசாங்கம் ஒரு போர்க்குற்றவாளியை இந்நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஒரு கண்டனதிற்குறிய செயலாகும்.

கோத்தபாய இராஜ பக்சேவின் மலேசிய வருகை இங்குள்ள தமிழர்களைக் கொதிப்படைய வைக்கும் என்பதை பிரதமர் அறியவேண்டும்.