அன்வார்: கருப்புப் பெட்டியைப் ‘பாதுகாக்க’ முயல்கிறார்களா?

blackஎம்எச்370-இல்  இருந்த  கருப்புப்  பெட்டி  யாருக்குச்   சொந்தம்  என்பதைத்  தீர்மானிப்பதற்காக  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  பிரிட்டனுக்குச்  சென்றிருப்பதன்  நோக்கம்  அது  வெளிநாட்டவர்  கைகளில்  சிக்கிவிடாமல்  தடுப்பதற்காகத்தானோ  என்று  ஐயுறுகிறார்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்.

“கருப்புப்  பெட்டியைப்  பாதுகாப்பதில்  அதிக  அக்கறை  காட்டுகிறார்கள். இது  ஏன்  என்று  ஆர்வத்தைத்  தூண்டுகிறது”, என்றாரவர்.

அதில்  உள்ள  விவரங்கள்  மற்ற  நாடுகளைவிட  தனக்குத்தான்  முதலில்  கிடைக்க  வேண்டும்  என  மலேசியா  விரும்புகிறது  போலும்.

அப்படியானால்  அதில்  உள்ள  எதைப்  பாதுகாக்க  நினைக்கிறார்கள்  என்றவர்  வினவினார்.