மினி-ரோபோட்டுகளைக் கொடுத்துதவ முன்வந்தார் ஜேம்ஸ் கேமருன்

iataஆழ்க்கடல்  ஆய்வாளரும்  திரைப்பட  இயக்குனருமான  ஜேம்ஸ்  கேமருன்,  டைடேனிக்  கப்பலின்  உடைந்த  பகுதிகளை  ஆராய  தமக்குப்  பயன்பட்ட  தொலைவிலிருந்து  இயக்கப்படும்  சிறு-ரக  நீர்மூழ்கிச்  சாதனங்கள்  எம்எச்370-ஐத்  தேடும்பணிக்கும்  உதவியாக  இருக்கும்  என்று  கூறியுள்ளார்.

“கப்பலின்  உடைந்த  பகுதிகளை  ஆராய  நாங்கள்  உருவாக்கிய  ரோபோட்டுகள்  பயன்படுமானால்  அவற்றைக்  கொடுத்துதவ  தயார்”,  என்றவர்  புளும்பெர்க்கிடம்  கூறினார்.

காணாமல்போன  விமானத்தைக்  கண்டுபிடித்தால்  மட்டுமே  அவை  பயனாக  இருக்கும்  என்றாரவர்.