எம்ஏஎஸ் விமானங்கள் திரும்பத் திரும்பப் பிரச்னைக்குள்ளாவது ஏன்? விசாரிக்க உத்தரவு

masஅண்மைக்காலமாக  மலேசிய  விமான  நிறுவனத்தின்  விமானங்கள்  தொடர்ந்து  பிரச்னைகளுக்கு  உள்ளாவது  ஏன்  என ஆராயப்படும்.

“மலேசிய  விமான  நிறுவன  விமானங்கள்  தொடர்ச்சியாக  தொழில்நுட்பப்  பிரச்னைகளை  எதிர்நோக்குவது  ஏன்  என்று  விசாரணை  நடத்த  உத்தரவிட்டிருக்கிறோம்”  எனப்  போக்குவரத்து  துணை  அமைச்சர் அப்துல்  அசீஸ்  கப்ராவி  கூறியதாக  த  ஸ்டார்  கூறியுள்ளது.

நேற்றிரவு  10.09-க்கு, இந்தியாவின்  பெங்களூருக்குப்  புறப்பட்டுச்  சென்ற  எம்எச்192,  தொழில்நுட்பப்  பிரச்னையின்  காரணமாக கேஎல் அனைத்துலக  விமான  நிலையத்துக்கே  திரும்பி  வந்தது.

இந்த  எம்எச்192  சம்பவத்தில் சதித்திட்டம்  இருக்கும்  சாத்தியத்தையும்  போலீசார்  ஆராய்வார்கள்.