புக்கிட் குளுகோரில் மசீச போட்டி

gelugor eleபுக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில் போட்டியிட  வேண்டாம்  என்ற  கோரிக்கையை  பிஎன்  ஏற்காது. அங்கு  வேட்பாளரைக்  களமிறக்கப்  போவதை  மசீச  உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால்,  வேட்பாளர்  இன்னும்  முடிவு  செய்யப்படவில்லை  என மசீச  உதவித்  தலைவர்  சுவா டீ  யோங்  தெரிவித்தார்.   கர்பால்  சிங்  காலமானதால்  அத்தொகுதி  காலியாகியுள்ளது.

“அவசரமாக  முடிவு  செய்ய  வேண்டியதில்லை”,  என்றவர்  கூறியதாக  நியு  ஸ்ட்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  அறிவித்துள்ளது.

இது   இவ்வாண்டு  மசீச   போட்டியிடும்  இரண்டாவது  இடைத்  தேர்தலாக  இருக்கும். இதற்குமுன்  மார்ச்  மாதம்  அது  காஜாங்கில்  போட்டி  இட்டது. காஜாங்,  புக்கிட்  குளுகோர்  இரண்டுமே  பக்காத்தான்  ரக்யாட்  கோட்டைகளாகும்.