பிரதமர்: அரசாங்கம் ஹுடுட்டை நிராகரித்ததில்லை ஆனால்……

najibஅரசாங்கம்  ஹுடுட்  சட்டத்தை  நிராகரிக்கவில்லை  ஆனால், அதைச்  செயல்படுத்துமுன்னர்  பல  விவகாரங்களுக்குத்  தீர்வு  காண  வேண்டியுள்ளது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

ஹுடுட்டை  அதன்  நோக்கங்கள்  சிதைவுறாமல்  அமல்படுத்துவதற்குமுன்  பல  கட்டுப்பாடுகளையும்  விவகாரங்களையும்  ஆராய்ந்து  தீர்வுகாண  வேண்டும்.

“ஹுடுட்டை  நிராகரிப்பதற்கும்  அதைச்  செயல்படுத்தாமலிருப்பதற்கும்  பெரிய  வேறுபாடு  உண்டு”,  என்று  நஜிப்  கூறினார்.