எம்பி: நிக் அசீஸ் மருத்துவமனையில் நன்றாகவே உள்ளார்

nik azizபாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நன்றாக  இருப்பதாகவும்  அவர்  கோத்தா  பாரு,  குபாங்  கிரியானில்  யுனிவர்சிடி  சயின்ஸ்  மலேசியா  மருத்துவமனையில்  ஓய்வெடுத்துக்  கொண்டிருக்கிறார்  என்றும்  கிளந்தான்  மந்திரி  புசார்  கூறினார்.

நிக்  அசீசைத்   திங்கள்கிழமை  சென்று  கண்டதாக  அஹ்மட்  யாக்கோப்  கூறினார்.  சில  தரப்பினர்  அவரைப்  பற்றித்  தப்பான  தகவலைச்  சமூக  வலைத்தளங்களில்  பரப்பி  வருவதாகவும்  அது  தப்பு  என்றும்  அவர்  சொன்னார்.

“அவருக்கு  ஒரு  குடும்பம்  இருக்கிறது. எதுவானாலும் அவர்களைக்  கேட்கலாம். உறுதிப்படுத்தப்படாத  தகவல்களை  நம்பாதீர்கள்”, என  அஹ்மட்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார்.