காலிட்டைச் சந்திப்பது பற்றி சுல்தான் இன்னும் முடிவு செய்யவில்லை

khalid selசிலாங்கூர்  சுல்தான் ஷராபுதின்  இட்ரிஸ்  ஷா,  பாஸ்  எம்பி  காலிட்  சமத்துக்கு  பேட்டியளிப்பது  பற்றி  இன்னும்  முடிவெடுக்கவில்லை  என்கிறார்  சுல்தானின்  தனிச்  செயலாளர்  முகம்மட்  முனிர்  பானி.

நேற்று  அம்னோ-ஆதரவு  இணையத்தளமான  எஜண்டா  டெய்லி-இல்  சுல்தானைச்  சந்திக்க  காலிட்  செய்திருந்த  விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டதாக  செய்தி  வெளியிடப்பட்டிருந்தது.

கடிதம் கிடைக்கப்பெற்றதாக  மட்டுமே  செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாகவும்  அவர்கள்  சுல்தான்  காலிட்டின்  கோரிக்கை  நிராகரித்ததாக  செய்தி  போட்டு  விட்டார்கள்  என்றும்  முனிர் சொன்னார்.

“பேட்டி  கொடுப்பதா  இல்லையா  என்பதை  சுல்தான்  இன்னும்  முடிவு  செய்யவில்லை. செய்தியாளர்  செய்தியைத் திரித்து  போட்டுவிட்டார்.   இதனால்தான்  செய்தியாளர்களிடம்  பேசவே  விரும்புவதில்லை.

“சுல்தான்  நிராகரித்தார்  என்று  நான்  சொல்லவே  இல்லை”, என்றவர்  கூறினார்.