அமெரிக்கக் குற்றச்சாட்டு சுத்த பொய் – ரஷ்ய தூதர்

russiaமலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்  17-ஐ  சுட்டு வீழ்த்தியதில்  மாஸ்கோவுக்கும்  பங்குண்டு  என்பதற்கு  ஆதாரங்கள்  இருப்பதாக  அமெரிக்கா  கூறுவதை  மலேசியாவுக்கான  ரஷ்ய  தூதர்  லியுட்மிலா ஜி வொரோப்யேவா மறுக்கிறார்.

இதற்கு  முன்னரும்  இப்படிப்பட்ட  குற்றச்சாட்டுகளை   வாஷிங்டன்  சொன்னதுண்டு  ஆனால்,  எதையும்  நிரூபித்ததில்லை  என்றாரவர்..

“முதலில், ஆதாரத்தைக்  காண்பிக்கட்டும்.  ஈராக்கில், (ஈராக்கிய  அதிபர்)  சதாம்  உசேன்  பேரழிவு  ஆயுதங்கள்  வைத்திருந்தார்  என்பதற்கு  ஆதாரங்கள்  காண்பிப்பதாக  அமெரிக்க  அரசாங்கம்  உறுதி  கூறியது.

“இன்னும்தான்  காத்துக்  கொண்டிருக்கிறோம்”, என்றவர்  ரஷ்ய  தூதரகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர் கூட்டமொன்றில்  கூறினார்.