தகவல் தருவோருக்கு வெகுமதி அளித்து ஊக்குவிக்கலாம்

barதகவல்  தருவோருக்கு தாராளமாக  வெகுமதி   வழங்கலாம்  என்று  கூறும்  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  கிறிஸ்டபர்  லியோங்,  அது மேலும்  பலரைத்  தகவலளிக்க  ஊக்குவிக்கும்  என்கிறார்.

“2010  தகவல்  அளிப்போர் பாதுகாப்புச்  சட்டம்  பகுதி  26, வெகுமதி  அளிக்க  வகை  செய்கிறது.

“சம்பந்தப்பட்ட  சட்ட  அமலாக்கத்  துறைதான் வெகுமதி  கொடுப்பது  பற்றி  முடிவு  செய்ய  வேண்டும்”.

நேற்றிரவு, ‘மலேசியாவில்  தகவலளிப்பு’  என்ற  தலைப்பில் நடைபெற்ற  கருத்தரங்கில்  பேசியபோது  லியோங்  இவ்வாறு  கூறினார்.

தகவல் அளிப்போர்  பாதுகாப்புச்  சட்டம்,  இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தும்  தகவல்  அளிப்போரை,  அதிகாரத்துவ  இரகசிய  சட்டம்,  வங்கி, நிதி  நிறுவனச்  சட்டம்  போன்றவற்றிலிருந்தும்  பாதுகாக்க  வேண்டும்  எனவும்  லியோங்  குறிப்பிட்டார்.