நூற்றுக்கணக்கானோர் நீதிகேட்டு தூதரகங்கள்மீது படையெடுப்பு

prrotestஎம்எச் 17  துயரச்  சம்பத்தில்  பலியானவர்களுக்கு  நீதி  வேண்டும்  என்ற  கோரிக்கையை முன்வைத்து  பிஎன்  ஏற்பாடு  செய்திருந்த  ஆர்ப்பாட்டத்தில்  கிட்டதட்ட  500 பேர்  கலந்துகொண்டனர்.  அவர்கள்   ரஷ்ய,  உக்ரேனிய  தூதரகங்கள்  உள்ள  சாலைகளிலும்  ஐநா  அலுவலகத்திலும்  திரண்டு  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் “Justice 4 MH17” என்ற  வாசகம்  எழுதப்பட்ட  டி-சட்டைகளை   அணிந்திருந்தனர். பெர்காசா  உள்பட  பல  என்ஜிஓ-களின்  உறுப்பினர்களும்  அங்கு   காணப்பட்டனர்.

“பல்கன் போரில்  எம்எச் 17 பலிகடா  ஆனது”  என்று  கூறும்
அற்விப்பு  அட்டைகளை  வைத்திருந்த  அவர்கள் “எங்களுக்கு  நீதி  வேண்டும்”  என்றும்  முழக்கமிட்டனர்.

பின்னர், அம்னோ  இளைஞர்  துணைத்  தலைவர்  கைருல்  அஸ்வான்  ஹருன்   இரண்டு  தூதரகங்களிலும்  ஐநா  அலுவலகத்திலும்   மகஜர்களைக்  கொடுத்தார். மகஜர்  கொடுக்க  கைருலுடன்  மசீச, மஇகா  இளைஞர்  தலைவர்களும்  சென்றனர்.