டிஏபி வான் அசீசாவை ஆதரிக்கிறது; பாஸ் காலிட்டை விரும்புகிறது

azizahமந்திரி  புசார்  பதவியில்  காலிட் இப்ராகிமுக்குப்  பதிலாக  டாக்டர்  வான்  அசீசா  வான் இஸ்மாயிலை அமர்த்தும்  பிகேஆர்  முயற்சி  தொடர்பில் சட்டமன்ற  உறுப்பினர்களிடையே  மாறுபட்ட  கருத்துகள்  நிலவுகின்றன.

சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா,  வான்  அசீசாவை  ஆதரிப்பதாக  பெரித்தா  ஹரியான்  கூறியுள்ளது. பிகேஆர்  துணைத் தலைவர்  முகம்மட் அஸ்மின்  அலி  அப்பதவியை  ஏற்பதுகூட  அவருக்குச்  சம்மதமே.

சிலாங்கூர்  டிஏபி  துணைச்  செயலாளர்  இங்  சுவி  லிம், பக்காத்தான்  உச்சமன்றம்  செய்யும்  முடிவைத்தான்  கட்சி  ஆதரிக்க  வேண்டும்  என்று சினார்  ஹரியானிடம்  தெரிவித்தார்.

ஆனால், சிலாங்கூர்  பாஸ்  தலைவர்  இஸ்கண்டர்  அப்துல்  சமத்,  பாஸ்  மாற்றத்தை  ஏற்றுக்கொள்ள  தயாராக  இல்லை  என்று  கூறியிருக்கிறார்.

“சிலாங்கூர்  பாஸுக்கு  அது  ஏற்புடையதல்ல…..மாநிலத்தை  வழிநடத்திச்  செல்ல  காலிட்டின்  சேவை  இன்னும்  தேவை  என்பதே  எங்களின் கருத்து”, என்றாரவர்.

பக்காத்தான்  உச்சமன்றக்  கூட்டம்  இன்று  நடைபெறுகிறது.  அதில்  இவ்விவகாரம்  விவாதிக்கப்படும்  எனத்  தெரிகிறது.