எம்எச் 17 சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு நாடாளுமன்றம் கண்டனம்

dewanஇன்று  நடந்த  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டம், கடந்த  வியாழக்கிழமை  உக்ரேய்னில் எம்எச் 17  சுட்டு வீழ்த்தப்பட்ட  நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற,  காட்டுமிராண்டித்தனமான  செயலுக்குக்  கடுமையாகக்  கண்டனம்  தெரிவித்தது.

எம்எச் 17மீது  தீர்மானம்  ஒன்றைத்  தாக்கல்  பேசிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  விமானம்  விழுந்து  நொறுங்கிய  பகுதிக்குள்  செல்ல  அனுமதி  மறுக்கப்பட்டதையும்  அதனால்  சடலங்களை  மீட்டெடுப்பதில்  ஏற்பட்ட  தாமதத்தையும்  கண்டு  மலேசியா  ஏமாற்றமும்  ஆத்திரமும்  கொண்டிருப்பதாகக்  குறிப்பிட்டார்.

“ஆனாலும், உண்மை  தெரியும்வரையில்  யாரையும்  குற்றம்  சொல்ல  விரும்பவில்லை”, என்றார்.

“வர்த்தக விமானமான  எம்எச் 17-ஐ  சுட்டுவீழ்த்தியது  மிகக்  கொடூரமான, ஈவிரக்கமற்ற,  வன்முறை சார்ந்த  ஒரு  குற்றச்செயல்”,  என்றும்  அவர் கூறினார்.

அச்சம்பவத்துக்குப்  பின்னணியில்  உள்ள  உண்மையைக்  கண்டறியும்  முயற்சி  தொடரும்  என்று  கூறிய  நஜிப்,  உயிரிழந்தவர்களுக்கு  நீதி கிடைக்க  அரசாங்கம்   விடாமல்  போராடும்  என்றும்  உத்தரவாதம்  அளித்தார்.

இவ்விவகாரத்தில்  ஆதரவு  தெரிவித்த  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கும்  கேலாங் பாத்தா  எம்பி-யும்  டிஏபி  ஆலோசகருமான  லிம்  கிட்  சியாங்குக்கும்  பிரதமர்  நன்றி  தெரிவித்தார்.