மகாதிர்: யூதர்கள் நாஜிகளை விட மோசமானவர்கள்

dr mயூதர்கள்  முன்னர் பட்ட  துன்பங்களிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ளவில்லை  என்பதைத்தான் காசா-வில்  பெருகி  ஓடும்  இரத்த  ஆறு  உணர்த்துகிறது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“ஜெர்மனியில்  நாஜிகளின் துன்புறுத்தலுக்கு  ஆளானபோது  யூதர்கள்  உலகின்  பரிவையும்  ஆதரவையும்  வேண்டி  நின்றார்கள். அப்படியெல்லாம்  துன்பப்பட்டிருந்தாலும்  துன்பத்தின்  வலியை அவர்கள்  புரிந்துகொண்டிருக்கவில்லை.

“இப்போது  நாஜிகளை  விடவும்  மோசமாக  நடந்து  கொள்கிறார்கள்.  தங்கள் செயல்களால்  மற்றவர்கள்  துன்புறுவது  பற்றியும்  கொல்லப்படுவது  பற்றியும்  அவர்கள்  கவலைப்படுவதில்லை”. மகாதிர்  தம்  வலைப்பதிவில்  இவ்வாறு  கூறினார்.

முன்னர்  பட்ட  துன்பத்துக்கு வஞ்சம்  தீர்த்துக்கொள்ள  நினைத்தால்  ஜெர்மானியர்கள்மீதும்  மற்ற  ஐரோப்பியர்மீதும்தான்  யூதர்கள்  தங்கள்  ஆத்திரத்தைக்  காட்ட   வேண்டும். ஆனால்,  அவர்கள்  அதை  அரபுக்கள்மீதுதான்  கட்டவிழ்த்து  விடுகிறார்கள்.

“அவர்களுக்கு  அரபுக்களைக்  கொல்வது  எளிதாகவும்  வேடிக்கையாகவும்  இருக்கிறது”, என்றவர்  கூறினார்.