பெர்காசா: காலிட் செல்லாக் காசாகி விட்டார் அன்வாருக்கு

aliஅப்துல்  காலிட்  இப்ராகிம் கட்சிக்குப் பயன்பட மாட்டார்  என்று  பிகேஆர்  நினைக்கிறது. அதனால்தான்  அவரை  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  தூக்க  முடிவு  செய்துள்ளது  என  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.

“காலிட்  பதவி விலகவோ விட்டுக்கொடுக்கவோ விரும்பவில்லை. அன்வார்தான், அவரால்  இனி  பயனில்லை  என  நினைத்து  அவரை  மாற்ற  விரும்புகிறார்.

“காலிட்டை  வேண்டாம்  என்று  தூக்கி  எறிவதுபோல்  இருக்கிறது. எவ்வளவு  கேவலமான  நிலை  காலிட்டுக்கு….சல்லிக்காசுக்குகூட  பயன்படாதவராகி  விட்டார்”, என  இப்ராகிம்  ஓர்  அறிக்கையில்  கூறி  இருந்தார்.

கிளந்தானில்  1970-களில் ஏற்ப்பட்டதுபோன்ற நிலை  இப்போது  சிலாங்கூரில்  உருவாகி  வருவதாகவும்  இப்ராகிம்  கூறினார். அப்போது  பாஸ்  தலைவர்  அஸ்ரி  மூடா  கிளந்தான்  மந்திரி  புசாரை  விலக்க  முயன்றார். அதனால்  ஒரு அரசியல்  நெருக்கடி  உருவாகி  அங்கு  அவசரகாலம்  அறிவிக்கப்பட்டது.

“சிலாங்கூரிலும்  அப்படி  ஒரு  நிலை  உருவாகலாம்  எனக்  கவலையாக  இருக்கிறது”, என்று  மேலும்  அவர்  தெரிவித்தார்.