‘கட்சித் தேர்தலில் பிகேஆரின் சாதனையோ சாதனை’: அம்னோ எம்பி கிண்டல்

nohகட்சித்  தேர்தலை நடத்தி  முடிக்க  மிக  நீண்ட  காலம்  எடுத்துக்கொண்ட  அரசியல்  கட்சி  எதுவென்றால்  அது  பிகேஆர்தான்  என  அம்னோ  எம்பி  நோ  ஓமார்  கூறினார்.

நான்கு  மாதங்களாகியும்  அதன்  தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி  அவர்  கேலி  செய்தார்.

133 மில்லியன்  வாக்காளர்களைக்  கொண்ட  இந்தோனேசியாகூட  அதன்  தேர்தலைக்  குறுகிய  காலத்தில்  நடத்தி  முடித்து  விட்டது  என்றாரவர்.

“மிக  நீண்ட தேர்தலை  நடத்தி  வரலாற்றில்  ஒரு  சாதனையைப்  புரிந்திருக்கிறது  பிகேஆர்.  இந்தோனேசிய  அதிபர்  தேர்தலையும்  அது  மிஞ்சி  விட்டது.

“அதன்  தேர்தல்கள்  முன்னரே தொடங்கின, இன்னும்  முடிவு  தெரியவில்லை. உறுப்பினர்கள்  நாற்காலிகளைத்  தூக்கி  எறிவதைத்தான்  பார்க்கிறோம்”, என்று  நோ  கூறினார்.

மார்ச்  29ஆம்  நாள்  தொடங்கிய  பிகேஆர்  தேர்தல்களின்  முடிவுகள்  ஆகஸ்டில்தான்  வெளிவரும்  எனத்  தெரிகிறது.