பாஸ் சிலாங்கூர்: பக்காத்தானிலிருந்து விலக நினைக்கவில்லை

sel pasசிலாங்கூர்  பாஸ்,  பக்காத்தான்  ரக்யாட்டிலிருந்து  விலகி  அம்னோவுடன்  இணைந்து  சிறுபான்மை  மாநில  அரசை  அமைக்கத்  திட்டமிடுவதாகக்  கூறப்படுவதை  மறுத்துள்ளது.

வாட்ஸ்எப்-இல்  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினர்  முகம்மட்  ஸுஹடி  கூறியிருப்பதுபோல்  எதுவும்  இல்லை  என்று  குறிப்பிட்ட  சிலாங்கூர்  பாஸ்  செயலாளர்  முகம்மட்  கைருடின்  ஒத்மான்,  அந்த  இஸ்லாமியக்  கட்சி  பக்காத்தானில்தான்  இருக்கும்  என்றார்.

“அவர்  கூறியிருப்பதுபோல் எதுவும்  விவாதிக்கப்படவில்லை.

“பாஸ் பக்காத்தான்  ரக்யாட்டுக்குக்  கடமைப்பட்டுள்ளது. அதற்குத்தான்  அது  விசுவாசமாக  இருக்கும்”, என்று  முகம்மட்  கைருடின்  கூறியதாக  சினார்  ஹரியான்  அறிவித்துள்ளது.