எம்எச்17: இறந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன

ketretaஎம்எச்17  விமானம்  விழுந்து  நொறுங்கியதில்  கொல்லப்பட்ட  மலேசியர்களின்  சடலங்கள்  கொண்டுவரப்படும்போது  அவை  முறையாக  வரவேற்கப்படும்.  மலேசியா,  அதற்கான  எற்பாடுகளை கேஎல் அனைத்துலக  விமான  நிலையத்தின்  பூங்கா  ராயா  வளாகத்தில்  செய்து  வருகிறது.

நேற்று,  பெர்னாமா  அங்கு  சென்றபோது  பிண  ஊர்திகள்  அந்த  வளாகத்துக்கு  வெளியில்  காத்திருப்பதைக்  காண  முடிந்தது. முழுச்  சீருடை  அணிந்திருந்த  அரச  மலாய்  ரெஜிமெண்ட்  படையினர்  மரியாதையுடன்  பிணப்  பெட்டிகளைத்  தூக்கி  செல்வதையும் கண்டது.

உக்ரேனில்  சுட்டு  வீழ்த்தப்பட்ட  அவ்விமானத்தில் 43  மலேசியர்கள் இருந்தனர். அவர்களின்  சடலங்கள்  மலேசியா வந்துசேர  மூன்று  வாரங்கள்  ஆகலாம்  எனத்  தெரிகிறது.

சடலங்கள்  வந்துசேரும்போது  அவற்றைப்  பெற்றுக்கொள்வதில்  சிக்கல்  எதுவும்  இருக்கக்கூடாது  என்பதற்காக  முன்கூட்டியே  ஏற்பாடுகள்  செய்யப்படுவதாக  அதிகாரி ஒருவர்  கூறினார்.

“இது  சடலங்களை வரவேற்பதற்கான  ஒத்திகைதான்.  எல்லாம்  திட்டமிடல்நிலையில்தான்  உள்ளது.   எதுவும்  இறுதி  செய்யப்படவில்லை.  இன்னும்  சிலவற்றைச்  சரிசெய்ய  வேண்டியுள்ளது. அதன்  தொடர்பில்  நாளை   கூடிப்  பேச  விருக்கிறோம்”, என்றாரவர்.