உஸ்தாத் மன்னிப்பு கேட்டார்

sorryஇந்துக்களை  இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கடும்  கண்டனத்துக்கு  ஆளான  இஸ்லாமிய  சமயப்  பேச்சாளரான  ஷாகுல்  ஹமிட் தம் செயலுக்காக  பகிரங்கமாக  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்.

“அப்படிப்  பேசியதற்காக  வருந்துகிறேன். அனைவரிடமும்  உளப்பூர்வமாக  மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன்”, என  புக்கிட்  மெர்தாஜாம் பண்டார்  பெர்டா  பள்ளிவாசலில்   செய்தியாளர்களிடம்  ஷாகுல் கூறினார்.

“நானும்  ஒரு  இந்தியன்  என்பதையும்  இந்து சமயத்தை  இழிவுபடுத்திப்  பேசி  இருக்கக்கூடாது  என்பதையும்  உணர்கிறேன். திட்டமிட்டு  அதைச் செய்யவில்லை.  இன  உணர்வுகளைத்  தூண்டி விடும் நோக்கமும்  இல்லை”, என்றாரவர்.

இந்திய  சமூகத்  தலைவர்களைச்  சந்தித்து  பகிரங்கமாக  மன்னிப்பு  கேட்கத்  தயார்  என்று  குறிப்பிட்ட  ஷாகுல்,  தாம்  மன்னிப்பு  கேட்டதைத்  தமிழ்  நாளேடுகள்   கொட்டை  எழுத்துகளில்  பிரசுரிக்க  வேண்டும்  எனவும்  கேட்டுக்கொண்டார்.