ஷரிசாட்: மகாதிரைப் போற்றுகிறோம், ஆனால் நஜிப்தான் எங்கள் தலைவர்

sarizatமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கடுமையாக  விமர்சித்து  வரும்  வேளையில்  அம்னோ  மகளிர்  நஜிப்புக்குப்  பிளவுபடாத  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டது.

அம்னோ  மகளிர்  தலைவர்  ஷரிசாட்  அப்துல்  ஜலில், இன்று  ஓர்  அறிக்கையில்,  எவ்வளவோ  பங்களிப்புச் செய்துள்ள  மகாதிரைப்  போற்றிப்  பாராட்டினாலும் இப்போது  தங்களின்  ஆதரவு  நஜிப்புக்குத்தான்  என்று  கூறியிருந்தார்.

“இன்றைய  அரசியல்,  பொருளாதார,  சமூகத்  தேவைகளை  உணர்ந்து, மலேசியாவை ஒரு  ஜனநாயக  நாடாக,  அமைதியான நாடாக ஜனநாயக  நெறிகளும், அமைதியும்,  வளர்ச்சியும்  நிரம்பிய  நாடாக,  உலகின்  நன்மதிப்பைப்  பெற்ற  நாடாக  வைத்திருக்கும்  தொலைநோக்கு,  விவேகம்  ஆகியவற்றுக்காக  நஜிப்பை  ஆதரிக்கிறோம்”, என்றாரவர்.