எம்பி பதவி பாஸ் கட்சிக்குக் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது

sinarபாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  ஒருவர்  சிலாங்கூர்  மந்திரி  புசாராகும்  வாய்ப்பு  பிரகாசமாக உள்ளதாம். சினார்  ஹரியான்  நாளிதழ்  கூறுகிறது.

சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா  பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலை  அல்லது  வேறு  எந்த  பிகேஆர்  வேட்பாளரையும்  நிராகரிக்கும்  பட்சத்தில்  இது  நிகழலாம்.

பக்கத்தான்  ரக்யாட்  பங்காளிக் கட்சிகளில்  பிகேஆர்  தவிர்த்து  பாஸில்தான்  மந்திரி  புசாராகும்  தகுதிகொண்ட  முஸ்லிம்  வேட்பாளர்கள்  உள்ளனர்.

“மேலும், பாஸ்  சட்டமன்றத்தில்  15  இடங்களை  வைத்துள்ளது. பிகேஆரிடம் (காலிட்  இப்ராகிம்  நீக்கப்பட்டதால்) 13 இடங்களே  உள்ளன”.

பாஸில், திறமையும்  அனுபவமும் வாய்ந்த  தலைவர்கள் இருப்பதாகவும்  சினார்  குறிப்பிட்டது.