இந்திய விவசாயிகள் மேம்பட்ட முறைகளைக் கையாள வேண்டும் : ஐ நா

un-logo1இந்திய விவசாயிகள் தமது தொழில்முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஐ நாவின் ஒரு அங்கமான உணவு மற்றும் விவசாய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிலேயே இது வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டாப் பகுதியில் இருக்கும் விவசாயிகளும் இந்தக் கருத்தரங்கில் பங்குபெற்றுள்ளனர்.

விவசாய நிலங்கள் குறைந்து வருவது, பருவமழை உரிய நேரத்தில், சரியான அளவில் பெய்யாமல் போவது ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்முறைகளை இந்திய விவசாயிகள் கையாள வேண்டும் என்று இந்த சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறைந்த நிலத்தில், மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் கூடுதல் உற்பத்திகளைப் பெற விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள், போதிய அளவில் நிதியுதவியையும், தொழில்நுட்பப் பயிற்சிகளையும் அளித்து உதவ வேண்டும் எனவும் இந்த மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த மாநாடு, அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, அதில் பங்குபெற்ற சர்வதேச விவசாய ஆலோசகரும், செய்தியாளருமான கோ.வெங்கட்ரமணி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம். -BBC

TAGS: