மாட் தயிப்: பிரதமர் ‘சுற்றுப்பயணியாக’ இருப்பது மகாதிருக்குப் பிடிக்கவில்லை

matமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கு  அரசாங்கத்  தலைவராக  இருப்பவர்  அடிக்கடி  சுற்றுலா  செல்வது   பிடிக்காது  என்பதால்தான் அவர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  சரமாரியாக  தாக்குகிறார்.

சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி  புசாரும்  இப்போது  பாஸ்  உறுப்பினருமான  முகம்மட்  தயிப்  ஹராகா டெய்லி-யிடம்   இவ்வாறு  கூறினார்.

“நடப்பு  அரசாங்க  நிர்வாகத்தில் ஒரு  தொய்வு  ஏற்பட்டுள்ளதால்  மகாதிர்  நஜிப்பைக்  குறை கூறுகிறார். அவருக்கு வேலை  செய்யும்  பிரதமரைத்தான் பிடிக்கும், சுற்றுப்பயணியாக  இருப்பரைப்  பிடிக்காது”, என்றாரவர்.