உள்துறை அமைச்சு குற்ற நிலவரம் பற்றி முரண்பாடான புள்ளிவிவரங்களைக் கொடுத்ததாம்

nieகுற்ற  நிலவரம்  தொடர்பாக  இரண்டு  எம்பிகளின்  கேள்விக்கு  உள்துறை  அமைச்சு முரண்பாடான புள்ளிவிவரங்களைக்  கொடுத்திருப்பதாக  கூலாய்  எம்பி தியோ  நை சிங்  கூறியுள்ளார்.

குளுவாங்  எம்பி லியு சின்  தோங்-கும்  பெங்காலான்  செப்பா எம்பி டாக்டர்  இஸானி  உசேனும்  2013-இன்  குற்ற  நிலவரம் பற்றிய  புள்ளிவிவரத்தைக்  கேட்டிருந்தார்கள்.  அவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட  பதில்களில்  இரண்டு  வகையான புள்ளிவிவரங்கள்  தெரிவிக்கப்பட்டிருந்தன.

“2013ஆம்  ஆண்டுக்கு  எப்படி  இரண்டு  வகை  புள்ளிவிவரங்கள் இருக்க  முடியும்? இரண்டுக்குமிடையே  பெரிய  வேறுபாடும்  காணப்படுகிறது”  என்றாரவர்.

லியுக்கு  கொடுக்கப்பட்ட  பதிலில் 147,062 குற்றச்செயல்கள்  நிகழ்ந்ததாகக் குறிக்கப்பட்டிருந்தது. இஸானிக்குக்  கொடுக்கப்பட்ட பதிலில் 99,613  குற்றங்கள்  நிகழ்ந்ததாகக்  கூறப்பட்டிருந்தது.