பினாங்கு முதல்வர் வீட்டிற்குள் வெடிகுண்டு வீசப்பட்டது

 

Molotov-Penang1நாட்டின் சுதந்திரன கொண்டாட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டிற்குள் வெடிகுண்டு வீசப்பட்டது.

இச்சம்பவம் இரவு மணி 11.45 வாக்கில் நடந்தது. எறியப்பட்ட வெடிகுண்டு அவரது வீட்டு வளாகத்தில் விழுந்தது. தீயினால் எரிந்த அடையாளங்கள் சிறிய அளவில் காணப்பட்டன.

இதனிடையே, தொடக்க விசாரனையில் வீட்டு வளாகத்திற்குள் எறியப்பட்ட போத்தலில் மண்ணென்ணெய் நிறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது என்று மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறினார்.

சந்தேகத்திற்குரிய நபர் மோட்டார் சைக்களில் வந்தது சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.

“ஆனால், வீட்டை காவல் புரியும் கடமையிலிருந்த போலீஸ்காரர் வீட்டு வளாகத்தினுள் இருந்ததால், வெளியில் நடந்ததை அவர் காணவில்லை”, என்றார் அப்துல் ரஹிம்.

Molotov-Penang2“உள்ளே எறியப்பட்ட போத்தல் கார் நிறுத்தும் இடத்தில் விழுந்து வெடித்தது”, என்று அவர் மேலும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து குவான் எங் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவரது ஊடக உதவியாளர் வோங் கிம் பெய் இரவு மணி 1.40 வாக்கில் கூறினார்.

இப்போதைக்கு இந்த விவகாரத்தை போலீசாரிடமே விட்டு விடுவோம் என்றாரவர்.

இச்சம்பவம் நடந்த போது முதல்வர் லிம் அவரது வீட்டில் துணைவியார் பெட்டி சியு மற்றும் அவர்களது இரு மகன்களுடன் இருந்தார்.