அசிசாவுக்கு முழு ஆதரவு கொடுத்ததை மறுக்கிறார் பாஸ் மகளிர் தலைவர்

sitiபாஸ்  மகளிர்  தலைவர்  சித்தி  ஸைலா  முகம்மட்  யூசுப், சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  டாக்டர்  வான்  அசிசாவுக்கு  நிபந்தனையற்ற  ஆதரவு  தெரிவிக்கும்  அறிக்கையில்  தாம்  கையெழுத்திடவில்லை  என்கிறார்.

அந்த  அறிக்கை,  டிஏபி, பிகேஆர்  மகளிர்  தலைவர்கள்  சொங் எங்,  ஸுரைடா  கமருடின்  ஆகியோருடன்  சித்தி  ஸைலாவின்  ஒப்புதலையும் பெற்ற பின்னரே  வெளியிடப்பட்டது  என  இதுகாறும்  கருதப்பட்டது.

அறிக்கையில் திருத்தம்  செய்ய  நினைத்ததாகவும்  அதற்குள்  அது  வெளியிடப்பட்டு  விட்டது  என்று சித்தி ஸைலா  பாஸ்  செய்தித்தாளான  ஹராகாடெய்லி- இடம்  கூறினார்.

“திருத்தம்  செய்வதற்குள், அதில்  கையெழுத்திடுவதற்குள்  அது  வெளியிடப்பட்டு  விட்டது”, என்றாரவர்.

தாம்  அசிசாவுக்கு  ஆதரவு  தெரிவித்தது  உண்மைதான்  என்பதை  அவர்  ஒப்புக்கொண்டார். ஆனால், தம்  ஆதரவு  கட்சியின்  முடிவை  அடிப்படையாகக்  கொண்டது  என்றார். அவரது  கட்சியான  பாஸ்  அசிசாவுடன் பிகேஆர்  தலைவர்  அஸ்மின்  அலியின்  பெயரையும்  மந்திரி  புசார்  பதவிக்கு  முன்மொழிந்துள்ளது.